http://https://youtu.be/0ZwlymMjolg
– தாமினி குல்கர்னி
வலதுசாரி இந்துக்குழுக்கள், சஞ்சய் லீலா பன்சாலியின் வரலாற்று காவியமான பத்மாவதி திரைப்படத்தை திரையிடுவதற்கு பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலில் மேலும் ஒரு படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சந்தீப் பட்டில் இயக்கியுள்ள ‘தஷ க்ரியா’ என்னும் மராத்திய திரைப்படம், சிறந்த திரைப்படமென விருதுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மையக்கரு, கிர்வந்தா பிராமணிய சமூகத்தினர், இந்துமக்களின் அந்திமக்கால ஈமச்சடங்குகளில் எவ்வாறெல்லாம் அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுகின்றனர் என, பான்யா என்ற சிறுவன் கதாபாத்திரம் மூலமாக தஷ க்ரியா படத்தில் சந்தீப் பட்டில் காட்டியிருக்கிறார்.
இந்து ஜனஜாக்ருதி சமிதி என்னும் அமைப்பு, திரைப்படத்தின் காட்சிகள், சாதிகளை இழிவாகக் காட்டுவதாகவும் சாதிக்கலவரத்தை தூண்டுவதாகவும், குற்றம் சாட்டியது. இப்படத்தை வெளியிட தமக்கு ஒரு சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்யவேண்டுமென தயாரிப்பாளரை நிர்பந்தம் செய்தனர். மேலும்,பிராமண சமூகம் மற்றும் மருத்துவர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இப்படம் தமது சமூக உணர்வுகளை இழிவு படுத்துவதாகக் கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. நவம்பர் 17அன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
“இப்படத்தின் வாயிலாக நம் சமுதாயத்தில் நிலவும் வேண்டத்தகாத பழக்க வழக்கங்களை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன் “,என்று இயக்குனர் பட்டீல் கூறுகிறார். “தஷ க்ரியா படமானது ஒரு நபர் மரணமடைந்த பத்தாவது நாள் சடங்கை மட்டுமே பேசுவதில்லை, மாறாக, சடங்குகளின் சுரண்டல் மற்றும் தற்கால சமுதாயத்திற்கு ஒவ்வாத மூட வழக்கங்களைப் பற்றியும் சொல்கிறது.”
தான் கேட்கும் பணத்தை கொடுத்தால் மட்டுமே இறந்தோரின் ஆத்மா சாந்தியடையும் என்று மிரட்டும் கேசவ் பாஜியின் கதாபாத்திரத்திலிருந்து தஷ க்ரியா தொடங்குகிறது. இந்த காட்சி படத்தின் மையப்புள்ளியாக மாறி, சிலசமயங்களில் கேலிச்சித்திரமாக மாறுகிறது.
இந்துக்களால் புனிதமெனக் கூறப்படும் மகாராஷ்டிர பைதான் எனும் கிராமத்தில் தஷ க்ரியாவின் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. புனிதமெனும் கதையாடல் அருகிருக்கும் கோலரின் ஆற்றினால் உண்டாவதாக இந்துக்களால் கூறப்படுகிறது. கிராமமே பசுமையாக ஆனால் வேறுபாடுகளால் நிரம்பிவழியும் பைதான் கிராமம் படத்தின் கதாநாயகர்கள்போல் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தப் படமானது மதச்சம்பிரதாயங்கள் மொத்த லாபமாக மாறும்போது மரபுகளின் இழைகள் எவ்வாறு அரிக்கப்படுகிறது என்பதை நுட்பமாகச் சித்தரிக்கிறது.
கேசவ் போன்றவர்கள் பைதான் போன்ற கிராமங்களை ஈமச்சடங்குகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் போது பான்யா போன்ற சிறுவர்கள் செத்தவர்களின் சாம்பலைக்கிளறி தமது ஜீவனத்தை தேடுகின்றனர். உள்ளூர் பிரமுகரான பாத்ரே சாவர்கார் என்பவரிடமிருந்து கடனாக பெறும் இரும்பு சல்லடை மூலம் தன்வாழ்வையும் குடும்பத்தின் வாழ்வையும் நடத்துகிறான் குறும்புத்தனம் கொண்ட பான்யா என்கிற அந்தச் சிறுவன். அந்த இரும்பு சல்லடை பான்யாவின் வாழ்க்கைக்கு ஒரு குறியீடு. அக்குறியீடு, சிக்கலைகளை நெகிழ்த்திக் காட்டுவதன் வாயிலாக, வலுவான கதையம்சத்தைப் புலப்படுத்துகிறது.
புகழ் பெற்ற மராத்தி எழுத்தாளரான பாபா பந்த் எழுதிய, 1994-ல் வெளிவந்த தஷ க்ரியா நாவலை தழுவி வெளிவந்தபடம். நாவலுக்கு வைத்திருந்த தலைப்புதான். திரைப்படமும் சூடியிருக்கிறது. திரைக்கதை சஞ்சய் பட்டீல் என்பவரால் எழுதப்பட்டது, இவரே இந்த நாவலை ஜோக்குவா[2009] மற்றும் பங்கிரா [2011] ஆகிய படங்களுக்காக ஏற்கனவே தழுவி திரைக்கதையாக்கியுள்ளார். தஷ க்ரியா இந்த வருடத்திற்கான மராட்டியமொழியில் சிறந்த படம், சிறந்த நடிகர், மற்றும் சிறந்த திரைக்கதை அமைப்பு என்று மூன்று தேசியவிருதுகளை வென்றுள்ளது.
படமும் நாவலும் இருபது வருடங்களுக்கு முந்திய பைதானை காட்டுகிறது, ஆனால் பைதான் இன்றும் மாறவில்லை என இயக்குனர் பட்டீல் கூறுகிறார்.
‘பிறப்பும் இறப்பும் மண்ணின் அழிக்கமுடியாத கூறுகளாக இருக்க, இந்த சடங்குகள் விடாப்பிடியாக இருக்கும், ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை தளமானது வலுவில் இருக்கும், அவற்றை எதிர்க்க எவருக்கும் உரிமையில்லை ‘,என்று அவர் கூறுகிறார். ‘ஒரு திரைப்படத்தை ஆக்கும்பொழுது இவைபோன்ற விஷயங்கள் தற்காலத்தியது ஆகாது’.
இத்திரைப்படம் நீளமான பொறுப்பிலிருந்து விலகுதலை சுட்டுகிறது. இது சிலகாட்சிகளில் பான்யாவின் திருமணத்தை சுட்டினாலும் ,இது குழந்தைகள் திருமணத்தை ஆதரிக்கவில்லை. இப்படம் படத்தின் ஆரம்பத்திற்காக மறுப்பை வெளியிடவில்லை என்றாலும் பிராமணர்களின் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்ப்பார்க்கவில்லை என பட்டீல் கூறுகிறார். பெரும்பாலான எதிர்ப்புகள் புனேவில் நடத்தப்பட்டன.
“குறிப்பட்ட வகுப்பினரையோ அல்லது ஜாதியினைரோ நான் புண்படுத்திவிட்டதாக அவர்கள் கூறுவதை எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் கூறுகிறார். “ஏராளமான மக்கள் என்னை அழைத்து இதுபோன்றதொரு படத்தை நான் எப்படி எடுக்கலாம் என கேட்கின்றனர் ‘. இருப்பினும் நான் அவர்களோடு பேசவேண்டுமென விருப்பப்படுகிறேன்.”
சில கேள்விகள் இயக்குநரை திணறடித்திருக்கின்றன.’நேற்றுதான் ஒரு நபர் என்னிடம், தஷ க்ரியா சடங்குகள் உம்முடையது அல்ல,அவை எங்களுக்கு சொந்தமானவை” என்று கூறியதாகத் தெரிவிக்கிறார்.
மத்திய திரைப்பட தணிக்கைத்துறை முன்னமே இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிவிட்டது.’யாருக்கேனும் இப்படத்தை பார்க்க விருப்பமில்லாவிட்டால் பார்க்காமல் போகட்டும், அது அவர்களது சுதந்திரம், ஆனால் பார்க்கவேண்டும் என விருப்பப்படுபவர்களை தடுப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை?’ என்கிறார். மேலும், ‘இதுபோன்ற விவகாரத்தில் ஒரு நாவல் எழுதப்படும் போது அதே நாவலை ஏன் படமாக எடுக்கக்கூடாது? ஆனால் இதேநிலைமை நீடித்தால் புதிதானவிஷயங்கள் ஏதும் வராது’. என்று ஆவேசமாய்க் கேட்கிறார்.
பட்டீலும் அவரது குழுவினரும் இப்படத்தை தயாரிக்கும்முன் இயக்குனர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தை மராத்தியில் எடுக்க முயற்சித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. வேறு சில காரணங்களினால் அந்த முயற்சி கைவிடப்பட்டு விட்டது.
தமிழாக்கம் : பெரு. முருகன்
நன்றி :Scroll.In