தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்பாஷை – மீள் பதிப்புக்கான பதிப்புரை

– எஸ்.சத்யதேவன்   19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையானது ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டினால் ஏற்பட்டது என்றால் மிகையாது. ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசப்படும்போதும் எழுதப்படும்போதும் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை, நல்லை நகர் ஆறுமுகம் பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆகியோரின் பணிகள் தமிழுலகில் பெரிதும் அறியப்பட்டவை. யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான தமிழறிஞர்களின் தமிழ்ப்பணிகள் பற்றிய செய்திகள் பல அப்பிரதேசங்களைத் தாண்டித் தமிழுகின் பரவலான கவனிப்பைப் பெறாது போனமை ஒரு தீநேர்வாகும். நற்பேறாக,  வித்துவான் எப். …

ஆவணம் : பாய்ச்சலூர் பதிகம்

தமிழில் வெளிவந்த முதல் தலித் இலக்கியப் படைப்பு என்று சொன்னால் பாய்ச்சலூர் பதிகம் என்னும் இந்தப் படைப்பைத்தான் சொல்ல வேண்டும். மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் தமிழகத்தின் வளங்களையெல்லாம் சுருட்டி ஏப்பம் விட்டுக் கொண்டும் எளிய மக்களைச் சாதியில் குறைந்தவர்கள் என்றும் தீண்டப்படாதவர்கள் என்றும் ஒதுக்கிவைத்தும் பல நூற்றாண்டுகள் எதிர்ப்பில்லாமல் செய்துவந்த கொடுமைகளுக்குப் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புக் கிளம்பி அது தமிழிலக்கியங்களிலும் பதிவுபெறத் தொடங்கின. சாதியத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் போன்ற …

மணிமேகலையின் ஊடாக பௌத்தம்

– பொ.வேல்சாமி 1898ல் உ.வே.சாமிநாதையர் மணிமேகலையை அச்சுக்குக் கொண்டு வந்தார். வழக்கமாகத் தன்னுடைய நூல்களுக்கு விரிவான முன்னுரைகளைக் கொடுக்கும் உ.வே.சா. இந்த நூலுக்கும் அத்தகைய ஒரு முன்னுரையைக் கொடுத்திருக்கின்றார். அந்த முன்னுரையில் தமிழ் அறிஞர்களால் இந்நூல் சரியான வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை என்று கூறி, அத்தகைய புரிதலுக்காகத் தான் பல்வேறு தகவல்களை இந்தப் பதிப்பில் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். 1894ல் திருமயிலை சண்முகம் பிள்ளையால் வெளியிடப்பட்ட மணிமேகலை பதிப்புடன் ஒப்பிட்டால் இரண்டு பதிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் …

மாலையம்மன்

– தொ.பரமசிவன்   மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. அதுவும் தமிழ்நாட்டைப் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் உலகத்துடன் ஆன இந்த உறவு விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்துவிடுகின்றது. அரும்பு, மொட்டு, பூ, மலர் என்பவை மலரின் பருவத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும். இவற்றோடு ‘பூ(வி)ரி’ (தென்னம்பூரி), மடல் என்ற சொற்களும் இங்கே நினைக்கத் தகுந்தவை. இணர், தாது, பொகுட்டு, அல்லி, புல்லி, தோடு, மடல் என்பவை பூவின் உறுப்புக்களைக் குறிக்கும் பெயர்களாகும். பூ …

நடுகல் வழிபாடு

– பேராசிரியர் அறிவரசன்     தகுதி வாய்ந்தவர்களை வணங்குதல், வழிபடுதல் என்பது சிறந்த பண்பாடாகும். பெற்றோர், ஆசிரியர், புலவர், புரவலர் முதலானோர் வணங்கி வழிபடத்தக்கோராக மதிக்கப்பட்டனர். உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களை வணங்கி வழிபடுதலும் தமிழரிடையே வழக்கமாக இருந்தது. ஞாயிறு மறைகின்ற மாலைப் பொழுதில் இல்லுறை தெய்வங்களைத் தமிழ் மக்கள் வணங்கி வழிபட்டனர் என்பதை, ”நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர” என்று நெடுநல்வாடையும் (43-44)   ”அகல்நகர் …

தொடரும் புதையலைத் தோண்டும் ஆசை

– அ.கா. பெருமாள்   ஸ்ரீரங்கநாதன் கோவில் பூசகர்களுடன் கொண்ட மாறுபாட்டால் சங்கிலிபூதம், ஈஸ்வர காலபூதம் என்னும் இரண்டு பூதங்களுடன் திருவிதாங்கூருக்கு ரங்கநாதன் குடிபெயர்ந்தது பற்றிய ஒரு கதைப்பாடல் உண்டு. அதில் ஒரு நிகழ்ச்சி, “. . . ரங்கநாதன் கிலுகிலுப்பைக் காட்டின் நடுவே அமர்ந்தான். புலைச்சி ஒருத்தி அவனை அடையாளம் கண்டு பசியாற்றினாள். அந்த ஊர் அரசன் ரங்கனைக் கனவில் கண்டு கோவில் கட்டினான். அந்தக் கோவில் கருவறையில் ஒரு துவாரம் இருந்தது. அதன்வழி கடல்நீர் …

பண்பாட்டின் வாழ்வியல் : உலகம்மன்

தொ. பரமசிவன் உலகம்மன் தமிழ்நாட்டின் சமூக வலாற்றினையும், பண்பாட்டு வரலாற்றினையும் கண்டுணருவதற்குத் துணை நிற்கும் சான்றுகளின் குறிப்பிடத்தகுந்தது தாய்த் தெய்வ வழிபாடாகும். தமிழ்நாட்டில் வணங்கப் பெறும் தாய்த் தெய்வங்களில் மாரியம்மன், காளியம்மன், பொன்னியம்மன், இசக்கியம்மன், பத்திரகாளியம்மன் போன்றவை போலக் குறிப்பிடத்தகுந்த ஒரு தெய்வம் ‘உலகம்மன்’ ஆகும். நெல்லை மாவட்டத்தில் பெண் மக்கள் பெயர் வழக்குகளில் உலகம்மாள் என்றும் ஆண் மக்கள் பெயர் வழக்குகளில் உலகநாதன் என்றும் இப்பெயர் காணப்படுகிறது. தமிழகத்தில் வடபகுதியில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் லோகநாயகி, …

சூத்திர சீர்திருத்த சபை

– வசீகரன் திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய “சூத்திர சீர்திருத்த சபை” என்னும் ஒரு நிகழ்வு வரலாற்றில் ஏனோ இடம் பெறாமல் போய்விட்டது. பிராமணர்களின் உயரிய அந்தஸ்தும் கல்வி பொருள் வளங்களும் அவர்களின் நாகரீகத்தால் வந்தது என்று பிராமணர் அல்லாத சூத்திரர்கள் நினைத்தனர். எனவே சூத்திரர்களை குறிப்பாக பெண்களை நாகரீகப்படுத்த இச்சபை 1887-ல் கபிஸ்தலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஊரில் ஆசிரியராக பணியாற்றிய வி. தியாகராஜ பிள்ளை இதன் செயலாளர். இந்தச் சபை பற்றி அறிவதற்குள்ள ஒரே ஆதாரம் …

துப்பாக்கி சுடும் பயிற்சி – 1945

முனைவர் கா.சுப்பிரமணியன் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்துள்ள இந்த ஆவணம், பழனியிலுள்ள திருமலைக் கவுண்டன் வலசு என்னும் ஊரைச் சேர்ந்த முத்துரத்தினம்   என்பவரிடமிருந்து அப்பகுதியைச் சார்ந்த கோபி கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் கு.மகுடீஸ்வரன் அவர்களால் பெறப்பட்டது. அக்காலத்தின் இராணுவ நடவடிக்கை தொடர்பான வழக்கம் ஒன்றை இந்த ஆவணத்தின் மூலம் அறியமுடிகிறது. இரண்டாம் உலகப் போர் (1939-46) இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், 1945 ஜுலை மாதம் எழுதப்பட்டுள்ளது இந்த ஆவணம். 1943 அளவில் போரின் காரணமாக இந்தியாவில் பெரும் …

நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, நீலி : நாட்டுப்புறக் கதைகளில் பிரதிபலிக்கும் பெண்ணியச் சிந்தனைகள்

விஜயா ராமசாமி பெண்கள் குறித்த ஆய்வுப் பாடங்களும் நாடோடிப்பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பினைக் கொண்டுள்ளது. இந்த வாக்குவாதங்களுக்குப் பின்புலமான முக்கிய அம்சம் ஆண்கள் இதை எழுதுபவர்களாக, படைப்பவர்களாக இருக்கிறார்கள். இலக்கிய கலாச்சாரத்தில் பெண்களை முக்கியமாக ‘காட்சிக்குரிய உருவங்களாகவும்’ பெண்கள் இயங்கு பொருள்களாகவும், வாய்மொழியில் பரப்பப்படும் கலாச்சாரக் கலைகளின் வட்டத்துக்குள் இயங்குகிறார்கள். ஆகையால் நாடோடிப்பாடல்களின் மைய ஓட்டம் பெண்களின் குரல்களையும் பெண்களின் வரலாறையும் மீட்டெடுக்கும் விதமாக அமைகிறது. 1970 களில் கலாச்சாரப்பகுதிகளில் பெண்கள் இயக்கங்களும் பெண்கல்வியும் எழுகையில் பெண்களும் பெண்களுக்கான …