கமலாதாஸ் கவிதைகள்

கைதி சிறைச்சாலையின் அமைப்பை சிறைக்கைதி ஆராய்வதுபோல் உன் உடலின் அமைப்பை நான் ஆராய்கிறேன். ஏனெனில் என் அன்பே, என்றேனும் ஓர் நாள் அப்பொறியிலிருந்து நான் தப்பித்துச் சென்றுவிட வேண்டும்.   தமிழாக்கம் : தேன்மொழி சதாசிவம்

கவிதைகள் : மஹாரதி

மலை நோக்கி சிசிஃபஸ் உருட்டும் பாறை   காத்திருத்தல் நிகழ்கிறது யாருக்காக எதற்காக எங்கே எனத்தெரியா அறியாமையில் காத்திருத்தலின் நோக்கம் காத்திருத்தல் போல உருட்டி உருட்டி ஏற்றி மலைசேர்த்து மடுநோக்கி ஓடிவரும் பாறையை மீண்டும் மீண்டும் உருட்டியேற்றும் சிசிஃபஸின் வேலையும் ஒருவகை காத்திருத்தல் முத்தமிடலின் இறுதிக்கணத்தில் உதட்டில் தெறிக்கும் எச்சிலைப்போல இரவு மழைச்சாரலின் தெறிப்பு பஸ் ஜன்னல் கம்பிகளில் பட்டு முகம் சிலிர்க்கும் அழகு நிகழும் பயணத்தின் போதை ஊர் வந்ததும் இறங்கி விடுகிறது அங்ஙனமே காத்திருத்தலும் …

இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும்…

சாரா ஹால் உடன் ஒரு நேர்காணல்   சாரா ஹால் புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம் பெற்றவர், வன இயற்கைக்காட்சிகள் மீதும் இயற்கை உலகின் மீதும் கூரிய கவனம் கொண்டவர், The Electric Michelangelo மற்றும் The Wolf Border புத்தகங்கள் மூலம் பல ரசிகர்களைப் பெற்றவர் இந்த எழுத்தாளர். இவருடைய சமீபத்திய சிறுகதைகள் தொகுப்பான Madame Zero வில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் எல்லாம் மாறுபடக்கூடிய மனநிலைகளிலும், புதிய சவால்களை சமாளிப்பதைக் கொண்டதாகவும் இருக்கின்றன. “இருண்ட உளவியலுக்கான இடம் சிறுகதைகளாகும் …

தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை

“என்னைப் பேசவிடுங்கள் – 02”   பிரிந்தன் கணேசலிங்கம்   இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண …

கவிதைகள் : சங்கர்

சூன்யத்திலிருந்து சூன்யத்தை நோக்கி.. தெருவில் இறங்கி இரு கைகளையும் விரித்து அண்ணாந்து வான் பார்க்கிறேன் என் பார்வையை ஊடறுத்துச் செல்லும் பறவையிடம் மழையாகும் முன் மேகங்கள் பார்த்ததை நாமும் பார்க்கலாம் வா வென அழைக்கிறேன் அதுவும் சரியென சிறகுகள் இரண்டையும் விரிக்கிறது கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன பறவையே இப்போது நான் போகவேண்டும் பின் எப்போதேனும் நாம் சந்தித்தால் நீ பார்த்ததை எனக்குச் சொல் அடுத்த வெடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது மனம்….     நிலம் தொலைத்த மனிதர்கள் நிலம் …

வீணா தரணி கவிதைகள்

கையறு என்றொரு கவிதை உடுத்திருந்த உடைகளனைத்தும் அவிழ்த்து நிலைக்கண்ணாடியோடு நெற்றி சேர்த்து முலை இடுக்கின் வியர்வையால் கவிதை எழுத நான்கு புறமும் சுவர்களில்லாத குளியலறை கொண்ட ஒருத்தி உண்டு. பலதர ஆண்களுடைய காய்ந்து போன எச்ச உள்ளாடையில் வழிப்போக்கனால் பாதி இரவில் வெட்கத்தோடு வரைந்து வைக்கப்பட்ட ஒரு  முனகல் கவிதையின் எழுத்துப் பிழைகளை நினைத்து நினைத்து அவள் சிரிக்கும் ஒரு சிரிப்புண்டு. போர்வை இல்லாதவொரு குளிர்காலமொன்றால் கழுத்து நெறித்துக் கொன்று வீசிய ஒரு அரூப கனவின் கொலைக்கூடத்தில் அவள் கதறும் ஒரு …

மாண்டோ என்னும் மகத்தான கலைஞன்

  மஹாரதி   “பாரதநாடு சுதந்திரமடைந்து விட்டது; பாகிஸ்தானும் சுதந்திரமடைந்து விட்டது; ஆனால் இரண்டு நாடுகளிலும் மனிதன் இன்னும் அடிமையாகத்தான்இருக்கிறான், குறுகிய கண்ணோட்டத்தின் அடிமையாக; மதவாதசக்திகளின்அடிமையாக; காட்டுமிராண்டித்தனத்தின்அடிமையாக; மனிதாபிமானமின்மையின் அடிமையாக….” இப்படி எழுதினார் சதாத் ஹசன் மாண்டோ (1912-55), தேசம் துண்டாடப்பட்டு ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் அருவியாக எல்லைகளில் கொப்பளித்த 1947 பிரிவினைக் காலகட்டத்தில். 2017-ல் இருந்து கொண்டு சரியாக எழுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்திய பாகிஸ்தானி எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்ட அந்த உருதுச்சிறுகதை …

கவிதைகள் : மாலினி

பரமபதம் பரமபத விளையாட்டின் ஏறுமுக விளிம்பின் படிகளில் விஷமூறு பெரு வாய்தனை அகல விரித்துக் காத்திருக்கும் அரவமென அவை எப்போதும் என் பாதைகளில் வாய் பிளந்து காத்திருக்கின்றன. எப்போதாவது பெரும் புயலடித்து அதிர்வுறும் அதிசயம் நிகழ்ந்து அதில் எழும் வேகவிசையின் சிறு விரிசலினூடே எப்படியாவது உள்ளே நுழைந்து விடும் நப்பாசையில் இறுக மூடிக்கிடக்கும் என் மனவாசலில் ஏங்கிக் கிடக்கின்றன. சில வேளைகளில் சலிப்பாகி நகர்ந்து அருவியெனப் பொழியும் ஒரு போதிலதில் வீழ்ந்து நீந்தி குறிவைத்த இடத்தை அடைந்துவிடும் …

கவிதைகள் : வினோத்

எங்கள் குதிரைகளை ஓட்டிச்சென்றது யார்? நாங்கள் செவியிமை மடித்து உறங்கி கொண்டிருந்தோம் எங்களின் நாய்கள் கனவில் ஆழ்ந்து கொண்டிருந்தன அவைகள் தங்களுக்கு முளைத்த சிறகுகளை தடித்த நாவால் நக்கிக் கொண்டிருந்தன சர்ப்பம் கூட குரல் இழந்து நெடுநாட்கள் ஆகிவிட்டன அவைகள் புணரும்போது மட்டுமே சப்தமிடுபவை ஆனால் அது தனித்த சர்ப்பம் இருள் மூடிக் கிடந்த எங்கள் குடிக்குள் காலற்ற ஒருவன் வந்த தடம் பார்த்து நாங்கள் விடியலில் சென்றோம் குதிரைகளைத் தேடி வந்திருக்கிறோம் என்றோம் அவர்கள் குதிரைத் திருடனை …

கவிதைகள் : நிஷாமன்சூர்

முத்தக் கவிதைகள் 1 கலவரப்படுத்தாத ஒரு முத்தம் கேட்கிறாய், முத்தத்தால் கலவரப்படாத ஒரு இதயத்தை அளிக்கிறேன் 2 பிரபஞ்சத்தின் தலைவாசலை ஒரு முத்தத்தால் திறந்து வைக்கிறேன் 3 உன் இதழ்க் கோப்பையில் ஒரு முத்தத்தைப் பரிமாறினாய் என் மொத்த அணுக்களும் அந்த முத்தத்தால் ஒளிர்கின்றன 4 நிலவொளி மங்கிய இவ்விரவை ஒரு தடையற்ற முத்தத்தால் வெளிச்சமாக்குவோம் வா 5 அதிகம் அணிந்திராத ஒரு ரோஸ்கலர் சட்டையில் ஒரு முத்தத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் அதே முத்தத்தை அப்படியே திரும்பக் …