ஒரு போதும் என்னை விட்டுப் போகாதே

Never Let Me Go – நாவலின் துவக்கப் பகுதி. கசுவோ இஷிகுரோ என் பெயர் கேத்தி ஹெச். எனக்கு முப்பத்தியொரு வயதாகிறது. நான் பதினோரு ஆண்டுகளாக பராமரிப்பாளராய் இருந்து வருகிறேன். ஆம், எனக்குத் தெரியும், இத்தனை காலம் இருந்தது போதும்தான். ஆனால் உண்மையில் அவர்கள் என்னை இன்னும் எட்டு மாதங்கள், இந்த ஆண்டு முடியும் வரை, இங்கு தொடர்ந்து இருக்கச் சொல்கிறார்கள். அப்படியானால் கிட்டத்தட்ட சரியாக பன்னிரெண்டு ஆண்டுகளாகிறது. நான் என் வேலையை அருமையாகச் செய்கிறேன் …