டாக்டர் ப்ராடியின் அறிக்கை

– ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹேஸ்   என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப்பிடித்து தந்த லேன் என்பவருடைய ‘‘அரேபிய இரவிகளின் கேளிக்கைகள்’’(லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின் பக்கங்களுக்கிடையே, நான் கீழே படியெடுத்துத் தரப்போகும் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கண்டுபிடித்தோம். தெளிவான கையெழுத்து – இந்தக்கலையை நாம் மறக்க தட்டச்சுப்பொறிகள் நமக்கு தற்போது உதவி வருகின்றன – கிட்டத்தட்ட அந்தப் புத்தகம் வெளிவந்த காலத்திலேயே அப்பிரதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. லேனின் படைப்பு …

வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம்

– மிலோராட் பாவிச் நீங்கள் வாசிக்கவிருக்கும் இந்தக் கதையில், கதைநாயகர்களின் பெயர்கள் ஆரம்பத்தில் சொல்லப்படுவதற்குப் பதிலாக இறுதியில் சொல்லப்படும். மொழியியல் மற்றும் இராணுவ அறிவியல் மாணவனான எனது தம்பிதான் தலைநகரின் கணிதப் பயிற்றுநர்கள் மத்தியில், எங்கள் இருவரையும் நேருக்குநேராக அறிமுகப்படுத்தினான். கணிதம் I க்குத் தயார்செய்வதற்காக அவள் ஒரு கூட்டாளியைத் தேடிக்கொண்டிருந்ததால், நாங்கள் இருவரும் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம்; அவள் என்னைப் போல வெளியூர் இல்லை; அதனால், அவளுடைய பெற்றோரின் பெரிய வீட்டிலேயே படித்தோம். ஒவ்வொரு நாளும் மிகவும் …

ஒரு நாவல் ஃப்யூக் ஆக முடியுமா?

– மார்கட் சிங்கர் என்னுடைய குழந்தைப் பருவத்தில் பியானோவை வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு பாஃக் மீது அவ்வளவாகப் பிடித்தம் இருந்ததில்லை. நான் நேசித்ததெல்லாம் ஷூபர்ட், திவோர்ஸாஃக், ப்ராம்ஸ் ஆகியோரைத்தான். மாறாக, பாஃக் என் மண்டையைப் பதம் பார்த்தார். பாஃகை நிதானமாக, சீராக, ஒரு தாளப் பொறியின் பின்னணியில் பயிற்சி செய்ய வேண்டும். பொறுமையோ, சீரான பயிற்சி முறையோ என்றுமே என்னுடைய பலமாக இருந்ததில்லை. பண்திறம் என்பது வலக்கையால் மட்டுமே பயிற்சி செய்யப்படுவதில்லை. மாறாக, வலமிருந்து …

காதலின் மூன்று வடிவங்கள்: ஏரோஸ், ஃபிலோஸ் மற்றும் அகாப்பே

– பாவ்லோ கொய்லோ 1986-ல் நான் சாலைமார்க்கமாக சாண்டியாகோவிற்குப் போய்க் கொண்டிருந்தேன், என் வழிகாட்டி பெட்ரஸுடன். லோக்ரோனோ மாநகரத்தின் ஊடாகக் கடந்தபோது ஒரு திருமண வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இரண்டு தம்ளர் ஒயினைக் கேட்டு வாங்கினோம்; கொறிப்பதற்கு ஏதோவொன்றை நான் தயார் செய்து வைத்திருந்தேன். நாங்கள் மற்ற விருந்தாளிகளோடு உட்கார்ந்து கொள்ள பெட்ரஸ் ஒரு மேசை நாற்காலியைக் கண்டுபிடித்தான். புதுமணத் தம்பதிகள் ஒரு பெரிய கேக்கை வெட்டினார்கள். “அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும்,” என்று நான் …

‘குலக்’ காலகட்டத்திற்குப் பிந்திய காலகட்டத்தில் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்..

– ஷெர்கேய் லெபதேவ் (‘Gulag’ என்பது ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த வார்த்தை. 1930 முதல் 1955 வரை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் காலத்தில் புழங்கிய சொல். அரசியல் எதிரிகளைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் சித்ரவதை முகாம் என்ற அர்த்தம் கொண்டது. ஆங்கிலத்தில் அதை ‘forced labour camp’ என்பார்கள். அந்த ‘குலக்’ காலகட்டம் என்பது, அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட வன்முறைக் காலகட்டம் என்று சரித்திரத்தின் பிரக்ஞையில் நிரந்தர அம்சமாக மாறிவிட்டது. இந்த அம்சத்தை மையப்படுத்தி நோபல் விருது …

தற்கால நவீன சீனக்கவிதையின் சர்ச்சைகள்

– மிங்க் டி சீனாவில் கவிதைத் துறை பற்றியும் கவிஞர்களின் நிலை பற்றியும் பல வருடங்களாகவே பல்வேறுபட்ட விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சீனாவிற்கு வெளியே இருக்கும் வாசகர்களிடமிருந்து இந்தப் பிரச்சினைகள் பற்றி பலதரப்பட்ட கேள்விகளும், குழப்பங்களும் நிலவுகின்றன.அவர்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்குதல் இந்த ஆய்வின் நோக்கம். ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பல்வேறு பின்னணிகொண்ட 25 கவிஞர்களில், சிலர் நேர்காணல் தர நாகரிகமாக மறுத்துவிட்டனர்; இருவர் கோபமாக நிராகரித்தனர்; 16 பேர் சுருக்கமாக அல்லது நீண்ட கட்டுரைகள் மூலமாக பதில் அளித்தனர். …