எதிர்கால புதுவகை எழுத்து : ஒரு அறிமுகம்

ஜான் ஃப்ரீமேன்   முதல் புத்தகம் நான் அன்பளிப்பாக பெற்றது “குட்டி இளவரசன்”. என்னுடைய பாட்டி என் ஆறாவது பிறந்தநாளுக்கு எனக்கு அனுப்பியிருந்தாள். அதன் ஆசிரியரானஅந்த்வான்த் செந்த் – எக்சுபெரி வாட்டர்கலரில் வரைந்த படங்களுடன் கூடிய புத்தகம் அது. அதற்கு முன் நான் எதையும் வாசித்ததில்லை. நான் என் வாழைப்பழ நிற மஞ்சள் சைக்கிளை ஸோப்பர் என்னும் மோட்டார் சைக்கிளாகப்  பாவித்து ஓட்டிக்கொண்டிருந்தேன். Whiffle ball ம் Soccer ம் விளையாடுவேன், Phillies அணிக்கு தொடக்க பந்து வீச்சாளனாக வேண்டும் என்ற ஏக்கமும் இருந்திருக்கிறது. எனக்கு அப்போது தெரிந்த  …

அலெஹாந்த்ரா பிஸார்னிக் – “டயானாவின் மரம்” : ஆக்டேவியா பாஸ் முன்னுரை

  அலெஹாந்த்ரா பிஸார்னிக்கின் “டயானாவின் மரம்” : அதீத வெப்பநிலைகளைப் பொறுத்து, மெய்மையின் ஒரு தீர்வில், தீவிரப் பதட்டம் மற்றும் திகைப்பூட்டும் தெளிவு ஆகியவற்றின் இணைப்பால் வடிவமைக்கப்பட்ட ஒரு சொற்பொருள் சார்ந்த படிகமாக்கல். இந்த உலோகக் கலவையின் தயாரிப்பு பொய்களின் தடயங்களைக் கொண்டிருக்கவில்லை. டயானாவின் மரம் தெளிவாக உள்ளது, எந்த இருண்மையையும் தரவில்லை. அதன் சுய ஒளியை அது தருகிறது, சுருக்கமாகவும் சற்று மினுங்கியபடியும். அமெரிக்காவின் தரிசு நிலம் அதன் பூர்வீகம். அங்கு வரவேற்பற்ற சூழல், கடுமையான சொல்லாடல்களும் …

அலெஹாந்த்ரா பிஸார்னிக் கவிதைகள்

அலெஹாந்த்ரா பிஸார்னிக்   1. விடியலுக்காக நானே அந்தத் துள்ளலை உருவாக்கினேன். ஒளியின் அருகில் எனது உடலை நிலைப்படுத்தி பிறப்பின் துயரம் பற்றி பாடினேன்.     2. இவை சில சாத்தியமுள்ள பதிப்புகள்: ஒரு துளை, ஒரு நடுங்கும் சுவர்…     3. வெறும் தாகம் மெளனம் முரண் இல்லை என்னிடம் சற்று எச்சரிக்கையாயிரு, என் அன்பே வெறுமையான கோப்பைகளுடன் உள்ள பயணியின் பாலைவனத்தில் மெளனமாக இருக்கும் பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாயிரு மற்றும் அவள் …

விநோதக் கவிதை: கவிதையில்  விநோதம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    ராபர்ட் லீ ப்ரேவர்   Poetic Asides-ல் சிறப்பாளர் பக்கம் வெளிவந்து நீண்ட நாட்களாகி விட்டது. எனவே, விநோதக் கவிதை (speculative poetry)  பற்றி ரேண்டி ஆண்டர்சனிடமிருந்து பதிலைக் கேட்டு மிகவும் உற்சாகமடைந்தேன். ரேண்டி ஆண்டர்சன் ஒரு கவிஞர் மற்றும் விநோதப் புனைவு எழுத்தாளர். நாட்டுப்புறக் கலைகள் மற்றும் மதங்களால் தூண்டுதல் பெற்ற கதைகளைக் கூறுகிறார். Why am I here, again? என்னும் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் உத்வேகக் கவிதை மற்றும் முழு …

2017 ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நாவல்கள்

  ஜஸ்டின் ஜோர்டன்   நாவல் தரும் இன்பங்களில் ஒன்று மீள்படைப்புக்கான அதன் முடிவற்ற ஆற்றல். 2017ஆம் ஆண்டு புதிய அணுகுமுறைகளையும், புதிய வடிவங்களையும் கதாசிரியர்கள் சோதனைக்குட்படுத்தியதையும் கண்டது. ஜார்ஜ் சான்டர்ஸ் எழுதிய ‘மேன் புக்கர்’ தேர்வு நாவலான Lincoln in the Bardo இருபது ஆண்டுகள் சிறுகதைகளில் சாதித்த ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பு.  இந்த நாவல் ஆப்ரகாம் லிங்கனின் இளவயது மகன் இறந்ததையும் அதன்பின் வாழ்க்கையையும் அமெரிக்க உள்நாட்டுப்போர் நினைவின் துணுக்குகள் மூலமாகவும், சண்டை …

நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு

கௌதம சித்தார்த்தன்   முடிவற்று நீளமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் உட்கார்ந்திருந்தவனின் முகத்தில் அடித்தது மழை. ஜன்னலுக்கு வெளியே விரையும் இருளில் மழைத்தாரைகள் ஒழுக, அந்தப் பெட்டியில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. குளிரின் வசவசப்பு கன்னத்தை நிமிண்ட, அவன் ஆசுவாசமாய் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான். கண்களுக்கு மேலே திரைந்திருந்த காலத்தின் நினைவுகளிலிருந்து எழுகிறது அந்த முகம். அவனது கனவுகளின் அற்புதத்தில் முடிவற்றுச் சுழலும் முகம். ஆனால், இந்த முகம் இப்போது எப்படியிருக்கும்? குழந்தைமை கவிந்த முகத்தின் பச்சை …

விநோதப் புனைவு : ஒரு ஈராக்கிய ஃப்ரான்க்கென்ஸ்டைனை உருவாக்குதல்

நாவலாசிரியர் அகமத் சாதவி உடன் ஒரு நேர்காணல்     அரேபிய புனைகதைக்கான பன்னாட்டு விருதுக்கு இந்த ஆண்டின் பட்டியலில் ஈராக் நாவலாசிரியர் அகமத் சாதவி இடம் பெற்றது ஆச்சரியப்படக் கூடியது அல்ல. இளைய ஈராக் நாவலாசிரியரான அவருடைய மூன்றாவது நாவல் Frankenstein in Baghdad (2013) வெளியீட்டுக்குப் பின் திடீரென புகழின் உச்சிக்குச் சென்று விட்டார். அந்த நாவல் எலும்பும் தோலுமான ஒரு மனிதனின் கதையைச் சற்று நடுங்க வைக்கும் அச்சுறுத்தலோடு விநோதப் புனைவாகக் கூறுகிறது. அவன் 2005-ல் …

விநோதப் புனைவு : ஈராக்+100

– ஜாசன் ஹெல்லெர்   சமீப வருடங்களில் உலகெங்கிலும் காணப்படுகிற விநோதப் புனைவிலக்கியம்* (Speculative Fiction) அமெரிக்காவில் குறிப்பிடத்தகுந்த பாதையைப் பெற்று வருகிறது., ஜொஹன்னா சினிசலோ(Johanna Sinisalo)-வின் The Core of the Sun, காரின் டிட்பெக்(Karin Tidbeck)-இன் Amatka போன்ற அறிவியல் புனைவு நாவல்கள் Grove Atlantic மற்றும் Vintage போன்ற பதிப்பகத்தாரால் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், சீனாவைச் சேர்ந்த லியூ சிக்சின் (Liu Cixin) தன்னுடைய The Three Body Problem என்கிற அறிவியல் …

தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

வாழ்   உண்மையை சொன்னால் எரிச்சலுறுவார்கள் இனியும் உண்மையை சொல்லாதே, தஸ்லிமா கலிலியோவின் காலமல்ல இந்தக் காலம். இது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு, உண்மையை சொன்னால் சமூகம் உன்னை வெளியேற்றும், நாடுகள் உன்னை தன் நிலத்திலிருந்து நீங்க பணிக்கும், மாநிலங்கள் உன்னைச் சிறைப்படுத்தும், சித்திரவதை செய்யும், உண்மையை சொல்லாதே, பதிலாக, பொய்யுரை   சூரியன் பூமியை சுற்றுகிறதென்று சொல், சூரியனை போலவே நிலவுக்கும் ஒளியுண்டென்று சொல். மலைகள் பூமியில் அறையப்பட்டிருக்கிறது என்று சொல், அதனால் பூமி வெட்டவெளியில் …

பயங்கரக் கதை

கார்மன் மரியா மச்சாடோ     அது மிகச் சிறியதாகவே துவங்கியது: மர்மமாய் அடைத்துக் கொண்ட சாக்கடை; படுக்கையறை ஜன்னலில் விரிசல். அப்போதுதான் அந்த இடத்துக்குக் குடி போயிருந்தோம், சாக்கடை ஒழுங்காக வேலை செய்து கொண்டு இருந்தது, கண்ணாடி முழுசாக இருந்தது, அப்புறம் பார்த்தால் ஒரு நாள் காலை அவை அப்படியில்லை. என் மனைவி ஜன்னல் கண்ணாடியின் விரிசலை தன் விரல் நகத்தால் மெல்லத் தட்டினாள், யாரோ ஒருவர் உள்ளே விடச் சொல்லித் தட்டுவது போல் அது …