வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கவிதைகள்

குளிர்காலத்தின் வருகை     காற்றால் ஒருமித்து உக்கிரமாகத் தாக்கப்பட்டன பாதி உரிக்கப்பட்ட மரங்கள், அனைத்துக்கும் வளைந்து கொடுத்து, உலர்ந்து கலக்கமுற்ற இலைகள் உதிர்ந்து விட மறுக்கின்றன அல்லது கடும் மழை போல் ஊக்கமடைந்து ஒரு புறமாகச் சினத்துடன் பிரவகிக்கின்றன பூஞ்செடிகள், கடுஞ்சிவப்பு வண்ணம் – எப்பொழுதும் இலையின்றி இருப்பது போலிருந்த – வெறுமையான தோட்டத்தின் வரப்பில் வீழ்கின்றன.       தமிழில்: மோகன ரவிச்சந்திரன்   வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்: உலகப் புகழ்பெற்ற கவிஞர், …

சாலமன் பாடல்கள் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டன

ஜுனாட் டயஸ் உடன் ஒரு நேர்காணல் தற்கால புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜுனாட் டயஸ், புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1999-ல் நியூயார்க்கர் பத்திரிகை அந்த வருடத்தின் முக்கியமான ஆளுமைகளில் 20 பேர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது. அவரது முதல் கதைத் தொகுப்பான ‘Drown’ விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ‘This Is How You Lose Her’ என்ற அவரது இரண்டாவது கதைத்தொகுப்பு, தேசிய விருதுக்குக் இறுதிச்சுற்று வரை வந்தது. ‘The Brief …

பினாச்சியோ

எம். பாண்டியராஜன்   திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, அருங்கலச்சிறப்பு, அறநெறிச்சாரம், நறுந்தொகை, நீதிநெறிவிளக்கம், நன்னெறி, உலக நீதி, முதுமொழிவெண்பா, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, புதிய ஆத்திச்சூடி, நெறிசூடி, தமிழ்சூடி, நீதிசூடி, நீதி சிந்தாமணி, பொன்மதிமாலை, நீதிபேதம், விவேகசிந்தாமணி, தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், சயங்கொண்டார் சதகம், அறப்பளீசுர சதகம், மணவாள நாராயண சதகம் – இத்தனையும் தமிழிலுள்ள நீதி நூல்கள். இந்தப் …

கதைக்கு வெளியே உள்ள கதை

  – கௌதம சித்தார்த்தன்   புதிர் போடும் பெண்ணே! மரணத்தின் வாசலில் உருப்பெறும் உன் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை விடவும் உன் கதைமொழியின் புதிர்க்கட்டங்களில் மாட்டிக்கொள்ளவேவிரும்புகிறேன் நான். மரணத்தை தள்ளிப்போடும் இந்த அபாயமான போட்டியில் கதைக்கு வெளியேதான் இருக்கிறது புதிர். உலகப்புகழ்பெற்ற புராண இலக்கியமான 1001 அரேபிய இரவுகளில், கதைசொல்லியான ஷெகர்ஜாத், தீராத கதைகளைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். அவளது மொழிநடை விரிந்துவிரிந்து பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. விரிந்து பரவும் அந்தக்கதைகளுக்கு வெளியே முற்றிலும் புதிதான …

கசுவோ இஷிகுரோ – நோபல் உரை

என் இருபதாம் நூற்றாண்டின் மாலை மற்றும் சில திருப்புமுனைகளும்   நீங்கள் என்னை 1979 ன் ஒரு இலையுதிர்காலத்தில் சந்தித்திருந்தால், சமூகவாதியா? இனவாதியா? என்னை எந்த பக்கம் வைப்பதென்று உங்களுக்கு குழப்பம் வந்திருக்கும். எனக்கு அப்போது 24 வயது. என்னுடைய தோற்றம் ஒரு ஜப்பானியனைப் போல இருந்தாலும் அந்நாட்களில் பிரிட்டனில் காணப்பட்ட ஜப்பானியர்களை போன்று இல்லை. தோள் வரை தொங்கும் தலைமுடியும் கொள்ளைகார பாணி தொங்கும் மீசையுமாக இருந்தேன். “ஹிப்பி” சகாப்தம் வழக்கொழிந்து போன மேற்சொன்ன காலத்தில், அதன் …

கால இயந்திரம்

– டினோ புஸாட்டி   காலத்தைத் தாமதிக்கும் முதல் மாபெரும் இயந்திரம் மாரிஸ்கோனோவில், க்ராசெட்டோ அருகில் நிர்மாணிக்கப்பட்டது. உண்மையில், அதைக் கண்டுபிடித்தவர், புகழ்பெற்ற ஆல்டோ கிரிஸ்டோஃபரி, க்ராசெட்டோவில்தான் பிறந்திருந்தார். பிசா பல்கலை பேராசிரியரான கிரிஸ்டோஃபரி குறைந்தது இருபது ஆண்டுகளாவது இது குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தனது ஆய்வுக்கூடத்தில் அற்புதமான பல ஆய்வுகளை நிகழ்த்தியுமிருக்கிறார். அதிலும் குறிப்பாக, பருப்பு வகைகள் முளை விடுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார். ஆனால், கல்வித்துறை உலகில் அவர் ஒரு தரிசனவாதியாகவே கருதப்பட்டார். …

ஜுலியோ கொர்த்தஸார் கவிதைகள்

  ஒரு காதல் கடிதம்   உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் இறுதியாக மிகக் கொஞ்சம்   ஏனெனில், இறுதியாக அனைத்தும்   அருகில் சென்று கொண்டிருக்கும் ஒரு நாயைப் போல, அல்லது ஒரு குன்று, அந்த அர்த்தமற்றவைகள், லெளகீகம், கோதுமைக் காது, நீண்ட கூந்தல் மற்றும் இரண்டு சர்க்கரைக் கட்டிகள், உன் உடலின் வாசனை, என்னிடம் அல்லது எனக்கு எதிராக நீ கூறியது எதுவாக இருந்தாலும்,   மிகக் கொஞ்சமான அனைத்தும் உன்னிடமிருந்து எனக்கு வேண்டும் ஏனெனில் …

எட்கர் ஆலன் போ கவிதைகள்

ஒரு கனவுக்குள் ஒரு கனவு   புருவத்தின் மீதான இந்த முத்தத்தை எடுத்துக் கொள்! பிறகு, இப்போது உன்னிடமிருந்து விடைபெறுதலையும், இவ்வாறு ஒப்புக் கொள்கிறேன் – உன்மீது தவறில்லை, யார் கருதியது எனது நாட்கள் ஒரு கனவென்று; இன்னும் எதிர்பார்ப்பு தூரப் பறந்தால் ஒரு இரவில், அல்லது ஒரு நாளில், ஒரு பார்வையில், அல்லது இன்மையில், ஆகவே சற்றுக் குறைவானது ஓடி விட்டதா? நாம் காணும் அல்லது தோன்றும் அனைத்தும் ஒரு கனவுக்குள் ஒரு கனவு.   …

இம்மானுவேல் மிஃப்சுத் கவிதைகள்

இம்மானுவேல் மிஃப்சுத்   நீ உறங்குவதற்கு முன் ஒரு கவிதை   நான் உன்னைப் பார்த்ததிலிருந்து, நீ நான் பார்த்த நீ அல்ல. பட்டாம்பூச்சிகளின் பெருந்திரள் ஒரு இலக்கு இல்லாமல் ஒன்றுகூடிப் பறந்து செல்வதை நான் பார்க்கிறேன்; கடலைத் தழுவும் மணலின் நீண்ட பரப்பைப் பார்க்கிறேன்; முடிவாக என்னைக் காதலிக்கத் துவங்கிய அந்தக் காற்றைப் பார்க்கிறேன்: நான் பார்வையிட்ட நகரங்கள் மற்றும் நான் சுற்றித் திரிந்த சாலைகள்: ஒன்றன் பின் ஒன்றாகப் பூக்கும் மலர்கள். மேலும் இப்போது …

தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

செங்கல் உடைக்கும் பெண்   நடைபாதையில் செங்கல் உடைக்கும் பெண் உடைக்கும் செங்கல் போல சிவப்புநிற புடவை, கொதிக்கும் வெயிலில் கல்லுடைக்கிறாள், அந்த மாநிறப் பெண் கல்லுடைக்கிறாள். இருபத்தொன்று இருக்குமா? பார்ப்பதற்கு நாற்பதை போல, ஏழு குழந்தைகளுக்கு தாயாகி, பத்து டாகாவிற்கு நாள் முழுதும், ஏழில் ஒன்றுக்கு கூட உணவுக்கு போதாமல், தினம் தினம் கல்லுடைக்கிறாள். அவளுக்கு பின்னால், குடையின் கீழ் ஒரு ஆண் கல்லுடைக்கிறான், நாள் முழுவதும் கல்லுடைக்கிறான், நிழலில் அவன் நாளொன்றுக்கு இருபது டாகாவிற்கு கல்லுடைக்கிறான். கல்லுடைக்கும் அவன் என்ன கனவு …