என் தலையில் குடையால் அடிக்கும் வழக்கம் கொண்ட ஒருவன் 

– ஃபெர்னாண்டோ ஸொரென்டினோ என் தலையில் ஒரு குடையால் அடிக்கும் வழக்கம்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் என் தலையில் தன் குடையால் அடிப்பதை ஆரம்பித்து சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. முதலில் அதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயரெல்லாம் தெரியாது. சராசரியான தோற்றம், சாம்பல் நிற சூட், நெற்றிப்பொட்டு நரை என பொதுவாகப் பார்க்கக் கிடைக்கும் முகத்தோடு இருந்தான். அவனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புழுக்கமான காலைப் பொழுதில் சந்தித்தேன். …

கடக ரேகை

ஹென்றி மில்லர்   (Tropic of Cancer நாவலின் ஒரு அத்தியாயம்) ஒரு வேசியைப் போன்றது பாரிஸ். தூர இருந்து பார்ப்பதற்கு அவள் பரவசமூட்டுபவளாக விளங்குவாள். உங்கள் கையில் அவள் அகப்பட்டாலன்றி உங்களால் நிலைகொள்ள முடியாது. பிறகு, ஐந்து நிமிடங்களுக்குப்பின் வெறுமையை உணர்வீர்கள். உங்களை நினைத்தே அருவருப்பு ஏற்படும் . ஏமாற்றப்பட்டதாக நினைப்பீர்கள். பாக்கெட்டில் பணத்துடன் நான் பாரிஸ§க்குத் திரும்பி வந்தேன் . சில நூறு பிராங்குகள் . ரயில் ஏறிப் புறப்படும்போது காலின்ஸ் என் பாக்கெட்டில் …

தூங்கும் ராணி

– இடாலோ கால்வினோ ரொம்ப காலத்துக்கு முன்னர், மேக்ஸிமஸ் என்ற சிறந்த நீதி வழுவாத அரசர் தனது நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஸ்டெஃபனோ, கியான்  மற்றும் ஆண்ட்ரூ என்ற மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக, அரசர் தனது கண்பார்வையை இழந்தார். தனது நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்கள் அனைவரையும் அழைத்து முயற்சித்தும், யாராலும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. அந்த வைத்தியர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் ஒருவர், “இந்த மாதிரி கண் …

26 குரங்குகள், அதனுடன் ஒரு புதிர்வழி

கிஜ் ஜான்ஸன்     1 எய்மி செய்யும் மிகப் பெரிய சாகஸம் 26 குரங்குகளை மேடையில் காணாமல் போகச் செய்வதுதான்.   2 பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு ‘பாத் டப்’பை நகர்த்தி வைத்து யாரேனும் ஒருத்தர் மேடைக்கு வந்து அதை பார்வையிடுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். சிலர் ஏறி வந்து பாத் டப்பின் அடிப்புறத்தை நோக்கினர். அடிப்புறத்தின் எனாமல் பூசிய பகுதியைத் தொட்டும் கைகளால் உள்புறத்தை துழாவியும் பார்த்தனர். இது முடிந்ததும் மேடையின் மேலே இருந்து …

கர்லூ பறவைகள்

– கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்   நாங்கள் மூவரும், மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம், நாணயத்தை யாரோ துளைக்குள் போட வுல்லிட்ஸர் மீண்டும் இசைத்தட்டினை – இரவு முழுதும் பாடிக் கொண்டிருந்த அதே இசைத்தட்டினை – மறுபடியும் இசைத்தது. பின்பு எங்களுக்கு யோசித்துப் பார்க்கக்கூட நேரம்  வைக்காமல், அதிவேகமாக நிகழ்ந்துவிட்டது அந்தப் பின்நிகழ்வு. எங்கிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்குமுன் – இருக்குமிடத்தின் ஞாபகத்தை நாங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருமுன் – அது நிகழ்ந்தது. ஒருத்தன், தன் கரத்தைக் …

தீப் பறவையின் கூடு

– சல்மான் ருஷ்டி  ‘‘நான்  இப்போது  உடல்கள்  எவ்வாறு  வேறு  உடல்களாக  மாற்றப்பட்டன  என்பதைச்  சொல்லத்  தயாராக இருக்கிறேன்.’’      ‘உருமாற்றம்’  ஓவிட் ஆங்கில மொழியாக்கம்: டெட்ஹியூஸ்   அது வெம்மை மிகுந்த தட்டையான, உலர்ந்த இடம். மழை, மிக அடிக்கடி பொய்த்ததால் அவர்கள் இப்போது வறட்சி வென்றுவிட்டது என்று சொல்கிறார்கள். அவர்கள் சமவெளியில் வாழும் மனிதர்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உழவர்கள், ஆனால் அவர்களுடைய கால்நடைகள் அவர்களைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. தண்ணீரைத் தேடித் தள்ளாடியபடி …

லிடியா டேவிஸ் : குறுங்கதைகள்

  மறதியாளர்கள்   பூனை ஜன்னலில் கத்திக் கொண்டிருக்கிறது. அது வீட்டிற்குள் வர விரும்புகிறது. நீங்கள் யோசிக்கிறீர்கள் ஒரு பூனையோடு எவ்வாறு வசிப்பது என்பது பற்றி மற்றும் ஒரு பூனையின் கோரிக்கைகள், ஒரு பூனையின் வீட்டிற்குள் வரும் தேவை மற்றும் அது எவ்வளவு நல்லது போன்ற எளிய விஷயங்கள் பற்றி உங்களை யோசிக்க வைக்கின்றன. இதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் மற்றும் நீங்கள் இந்தப் பூனையை உள்ளே அனுமதிப்பது குறித்து மும்மரமாக யோசிக்கிறீர்கள், எனவே பூனையை உள்ளே …

டாக்டர் ப்ராடியின் அறிக்கை

– ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹேஸ்   என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப்பிடித்து தந்த லேன் என்பவருடைய ‘‘அரேபிய இரவிகளின் கேளிக்கைகள்’’(லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின் பக்கங்களுக்கிடையே, நான் கீழே படியெடுத்துத் தரப்போகும் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கண்டுபிடித்தோம். தெளிவான கையெழுத்து – இந்தக்கலையை நாம் மறக்க தட்டச்சுப்பொறிகள் நமக்கு தற்போது உதவி வருகின்றன – கிட்டத்தட்ட அந்தப் புத்தகம் வெளிவந்த காலத்திலேயே அப்பிரதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. லேனின் படைப்பு …

வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம்

– மிலோராட் பாவிச் நீங்கள் வாசிக்கவிருக்கும் இந்தக் கதையில், கதைநாயகர்களின் பெயர்கள் ஆரம்பத்தில் சொல்லப்படுவதற்குப் பதிலாக இறுதியில் சொல்லப்படும். மொழியியல் மற்றும் இராணுவ அறிவியல் மாணவனான எனது தம்பிதான் தலைநகரின் கணிதப் பயிற்றுநர்கள் மத்தியில், எங்கள் இருவரையும் நேருக்குநேராக அறிமுகப்படுத்தினான். கணிதம் I க்குத் தயார்செய்வதற்காக அவள் ஒரு கூட்டாளியைத் தேடிக்கொண்டிருந்ததால், நாங்கள் இருவரும் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம்; அவள் என்னைப் போல வெளியூர் இல்லை; அதனால், அவளுடைய பெற்றோரின் பெரிய வீட்டிலேயே படித்தோம். ஒவ்வொரு நாளும் மிகவும் …