தஸ்லிமா நஸ்ரின் கவிதைகள்

வாழ்   உண்மையை சொன்னால் எரிச்சலுறுவார்கள் இனியும் உண்மையை சொல்லாதே, தஸ்லிமா கலிலியோவின் காலமல்ல இந்தக் காலம். இது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு, உண்மையை சொன்னால் சமூகம் உன்னை வெளியேற்றும், நாடுகள் உன்னை தன் நிலத்திலிருந்து நீங்க பணிக்கும், மாநிலங்கள் உன்னைச் சிறைப்படுத்தும், சித்திரவதை செய்யும், உண்மையை சொல்லாதே, பதிலாக, பொய்யுரை   சூரியன் பூமியை சுற்றுகிறதென்று சொல், சூரியனை போலவே நிலவுக்கும் ஒளியுண்டென்று சொல். மலைகள் பூமியில் அறையப்பட்டிருக்கிறது என்று சொல், அதனால் பூமி வெட்டவெளியில் …

ஃபாத்திமா நவூத் கவிதைகள்

நவீன எகிப்தியப் படைப்பாளிகளான இமான் மெர்சல் மற்றும் இமாத் வவூத் ஆகியோருக்குப் பிறகு மிகவும் பேசப்படக்கூடிய கவிஞராக இருப்பவரான ஃபாத்திமா நவூத் கெய்ரோவில் 1964ல் பிறந்தார். 1987 ல் கட்டிடக்கலையில் பட்டம் பெற்று பத்து ஆண்டுகள் கட்டிடக் கலைஞராக பணிபுரிந்தார், பிறகு முழுநேரக் கவிஞரானார். இவரது கவிதைகள், சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம், இவரும் வர்ஜினியா உல்ஃப் கதைகள் உடபட பல படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து அராபிய மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழாக்கம்: ரெங்கநாயகி   மறைவிழித்திரை …

ஜோம்னா ஹதாத் கவிதைகள்

காமம் சார்ந்த இலக்கியத்தை மீண்டும் அரபு நாடுகளில் தொடங்கியதில் பெரும் பங்காற்றிய ஜோம்னா ஹதாத் (Joumana Haddad) , பெய்ரூட்டில் 1970 ல் பிறந்தவர்; கவிஞர், பத்திரிக்கையாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.இவரது கவிதைகளில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி விடும் அசாத்திய சுதந்திரப்போக்கு தொனிக்கும் தன்மை ஊடாடி நிற்கும். 2008 -ல் தொடங்கப்பட்ட Jasad (அரபு மொழியில் தேகம் என்று பொருள்) என்னும் அராபிய இலக்கிய இதழ் உடல் சார்ந்த கருத்துப்பதிவுகளுக்கு முக்கியத்துவம் தந்து இயங்கியது. அதில் தொடர்ந்து விவாதத்திற்குரிய படைப்புளை …

கோரல் ப்ராச்சோ கவிதைகள்

1951 இல் மெக்ஸிகோவில் பிறந்து ஸ்பானிய மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் கோரல் ப்ராச்சோ (coral bracho), ஒரு மொழி பெயர்ப்பாளரும் கூட. இது வரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகளில் அழகியலும் காலம் மற்றும் மரணம் பற்றி ஆழ்ந்த சிந்தனைக் கருத்துக்களும், அதில் நிதர்சன உலகத்தை தரிசிக்கும் கூறுகளும் பொதிந்துள்ளன. வெறும் சந்தம் மட்டுமின்றி இரண்டு மெய்க்கோள்களில் இருந்து முடிவு அறியும்படியான முக்கூற்று வாத முறை நிறைந்து எழுதுபவரென விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்; 2004 ஆம் …

ஜாய் ஹார்ஜோ கவிதைகள்

மஸ்கூஜி பழங்குடி இனத்தின் உறுப்பினராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ள ஜாய் ஹார்ஜோ, துல்ஸாவில் பிறந்து, அமெரிக்க நுண்கலை கல்வி நிறுவனத்தில் ஓவியம், நாடகம் பயில திரைப் படம் இயக்குவது பற்றிய செயல்முறை வகுப்புகளுக்காகவும் நியு மெக்ஸிகோவிற்கு வந்தவர். இசையிலும் தேர்ந்தவர். சாக்ஸபோன் மீதான பிரியத்தில், ஜாஸ், ராக் என்ற நீண்ட தேடலில் பழங்குடியினரின் தொன்ம இசை வரை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். திரைக்கதைகள் எழுதுகிறார். இந்தக் ‘கழுகு கவிதை’ ஜாஸ் இசைப்பாடலாக …

பாட்ரிசியா கவாலி கவிதைகள்

பாட்ரிசியா கவாலி   1. என்னுடைய கவிதைகள் உலகத்தை மாற்றிவிடாது   யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார் என்னுடைய கவிதைகள் இந்த உலகத்தை மாற்றி விடாது என்று. நான் சொல்கிறேன், ஆமாம் உண்மைதான் என்னுடைய கவிதைகள் இந்த உலகத்தை மாற்றி விடாது.   2. உன்னை உனக்காகவே நேசிக்க முடியாது   உன்னை உனக்காகவே நேசிக்க முடியாது, இல்லை, நீ யாராக இருக்கிறாயோ அது ஒரு பிழை தான். ஆனால் உன்னிடம் இருக்கிறது ஒரு விசேஷ நயம் …