பால்ஸாக்

பால்ஸாக்கை நம்புகிறேன். செர்வண்டஸ் மற்றும் பாஃக்னருக்கு அடுத்து, என் மீது அதிக அளவு தாக்கம் செலுத்திய நாவலாசிரியர் அவர். மாபெரும் எழுத்தாளர்கள் பலரைப் போல் அவரும் பல பரிமாணங்கள் கொண்டவர். ஆனால் சமூக யதார்த்தத்தை எடுத்துரைப்பது என்று வந்தால் அவரளவு செய்திறன் மிக்க எழுத்தாளர் வேறு யாரும் இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கலாம் - “Moi, j’aurai porté toute une société dans ma tête” (“நான் ஒரு சமூகம் முழுவதையும் என் தலையில் எடுத்துச் சென்றிருப்பேன்”). அதே நேரம், இனி வரப்போகும் விஷயங்களுக்கு கட்டியம் கூறும் மாயவுரு ஒன்றை உருவாக்குவதிலும் அவருக்கு இணை யாருமில்லை. அவரது யதார்த்தத்தில் கற்பனையின் யதார்த்தமும் அடக்கம்.

This content is for Unnatham Paid Users members only.
Log In Register

முதலாம் இலக்கச் சிறை

சிமமண்டா அடிச்சி   முதன் முறையாக எங்களது வீட்டில் திருடியவன் எமது அயல்வீட்டைச் சேர்ந்த ஒஸிட்டா. சமையலறை ஜன்னலூடாக ஏறிப் புகுந்து எங்களது தொலைக் காட்சி, வீடியோ பார்க்கும் கருவியுடன்  அப்பா அமெரிக்காவிலிருந்து வரும்போது கொண்டு வந்த “Purple Rain” “Thriller”  ஆகிய படங்களின் வீடியோ நாடாக்களையும் திருடிச் சென்றிருந்தான். இரண்டாவது முறை நடந்த திருட்டைச் செய்தவன் எனது சகோதரன் நமாபியா. யாரோ திருடியதைப் போல் ஏமாற்றி அம்மாவின் தங்க நகையை எடுத்துக் கொண்டு போயிருந்தான். இந்தத் திருட்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை …

ஸாப்போ கவிதைகள்

முதல் பெண் கவியாகவும் முதல் லெஸ்பியன் கவியாகவும் முதல் நவீன கவியாகவும் 9 கவிதைத் தேவதை(Muses)களுக்குப் பின் பத்தாவதானவளாகவும் பாராட்டப்படுபவள் ஸாப்போ. பண்டைய கிரேக்கத்தில், கி.மு. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் ஹோமர் என்ற இதிகாசக் கவி. பின்பு, 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாள் ஸாப்போ என்ற தன்னுணர்ச்சிக் (Lyric) கவி. லிரிக் கவிதையை Tyrtaeus (7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி), Solon (640-560), Alcman (7ம் நூற்றாண்டு) சிறப்பாக்கியவர்கள். ஆனால் 600ல் ஆசியாமைனரை அடுத்திருக்கும் லெஸ்போஸ் தீவில் வாழ்ந்த இரு …

1 = 1

அன்னே கார்சன்   அவள், பிறரைப் பார்த்துவரச் சென்றிருக்கிறாள். அதிகாலை விடியலில் அவர்கள் எல்லோரும் விழித்தெழுவதற்கு முன்பாகவே, பாச், முதல் க்ளாவிச்சோர்டு* இசைக் கோர்வையைக் கேட்டுக்கொண்டே ஏரிக்கு நடக்கிறாள். என்றைக்கு அதை முதன் முதலில் கேட்டாளோ, அன்றிலிருந்தே, அதை நினைக்கும்போதெல்லாம் ஈரம் கசிகிற அவள், ஏதோ ஒரு நாளில் நடைபெறப்போகும் அவளது ஈமச்சடங்கில் அதுதான் இசைக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்த அதே இசையைக் கேட்டுக்கொண்டே நடந்து செல்கிறாள். காற்றின் இடைவிடாக் கசையடிக் கடைதலில், ஏரி அலைவுற்றுக் கொண்டிருக்க, அலைகள் …

ஊர்ஸுலா லா குன் கவிதைகள்

தோல்   “நம்மைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருப்பது தோல், நமது உடல்களை  உள்ளே பத்திரப்படுத்த உதவியபடி.”   எனக்கு அந்தக் கவிதையை அறுபது வருடங்களாகத் தெரியும். முதலில் தோன்றியதைவிட அதனிடம் மேலும் அதிகம் உள்ளது.   நாம் தோல்களற்றவர்களாக இருந்தால், ஒரு மேகத்தைப் போல, மானுடத் திரள்களில் கரைந்து விட மாட்டோமா?   நமது சிறு உடல்கள் கடலைவிட அதிக எல்லையற்றவையாக இருக்காதா,   மற்றும் வளிமண்டலம் போல் காற்றுக்குமிழியாக இருக்காதா? இங்குள்ளது போல் அங்கும் நாம் இருப்போமா? …

பெருந் தீ

ராபர்ட் ஸ்கிர்மர்   ‘நிக்கியும் நானும் இரு பழைய நண்பர்களின் அட்டகாசமான திருமணத்தில் கலந்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். கொண்டாடுவதற்கு என்றில்லாமல் ஒருவரை ஒருவர் மறப்பதற்கென்றே மலிவான ஒயினை பாலேட்டு நிறப் பிளாஸ்டிக் தம்ளர்களில் குடித்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் நானிருந்த பக்கமாகச் சாலையில் படபடவெனச் சப்தம் வந்துகொண்டிருந்த அந்த வீட்டைப் பார்த்தோம். முதலில், பாதிப்பின் அளவினை எங்களால் கணிக்க இயலவில்லை. ஒரு சன்னலின் கறுத்துப்போன கண்ணாடிக் கதவு பட்டென்று திறந்து பெரும் புகை சூழ்ந்து, தூசி மண்டலம் பேயாக உருக்கொண்டது. …

மாமா ஸோல்டன், காலப் பயணி

  ஜோர்ஜ் ஸிர்டெஸ்     1 எனது குடும்பத்தினர் அனைவரும் காலத்தினூடே பயணிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர் எனக் கூறினார் மாமா ஸோல்டன். இரவில் அலாரம் கடிகாரத்தை அமைப்பது ஆபத்து நிறைந்ததாக இருந்தது.   2 அலாரம் கடிகாரங்கள் வருவதற்கு முன், தோட்டத்துச் சேவலுக்கு ஏற்பாடு செய்வோம். அது பல குரலொலிகளை எழுப்பும், ஆனால் பொதுவாகப் பிழைத்துக் கொள்கிறது என்றார் மாமா ஸோல்டன்.   3 1526 முதல் 1789 வரை செல்வதற்காக காலை முதல் அந்தி …

2017 நோபல் அமைதி விருது : அகிரா கவாஸாகி நேர்காணல்

இந்த வருட அமைதிக்கான நோபல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிரா காவாஸாகியுடன் நேர்காணல் அகிரா கவாஸாகி பன்னாட்டு குடிமைச் சமூகக் கூட்டமைப்பின் பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்புப் பிரச்சாரக் குழுவின் (ICAN) முக்கியமான ஜப்பான் உறுப்பினர், 2017 நோபல் அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த அமைப்பு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஏற்பட உதவியது. ஜூலை 2017-ல் 122-1 என்ற வாக்கு அடிப்படையில் ஐக்கிய நாடுகளால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விருது விழாவில் பங்கேற்பதற்கு முன் காவஸாகி NHK …

ஆக்டேவியா பாஸ் கவிதைகள்

பாலம் இந்தக் கணத்திற்கும் இந்தக் கணத்திற்கும் இடையே, நானாக இருக்கும் எனக்கும் நீங்களாக இருக்கும் உங்களுக்கும் இடையே, வார்த்தைப்பாலம். அதனுள் நுழைவதன் மூலம் நீங்கள் உங்களுக்குள்ளாகவே நுழைகிறீர்கள். உலகம் இணைக்கிறது. ஒரு வளையம் போல மூடிக்கொள்கிறது. ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு எப்போதுமே உடலொன்று நீட்சியாகியிருக்கிறது : வானவில். அதன் வளைவுகளுக்கடியில் நான் உறக்கம் கொள்வேன்.     தெரு இதோ, நீண்ட அமைதியான ஒரு தெரு. நான் மையிருளில் நடந்து, தடுமாறி விழுகிறேன் மீண்டும் எழுந்து, …

பழிதீர்ப்பு

ஜோஸ் சரமாகோ   அந்த இளைஞன் ஆற்றுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தான். வெற்றுக் கால்கள்; முழுநீளக்காற்சட்டை மூட்டுக்கு மேலாக ஏறிச் சுருண்டிருக்க,  கால் முழுவதும் சேறு அப்பியிருந்தது; முன்பக்கம் திறந்திருந்த ஒரு சிவப்புச் சட்டை அணிந்திருந்தான். அவன் மார்பிலிருந்த பருவ வயதுப் பூனைமுடி கருக்கத் தொடங்கியிருந்தது. அவனது அடர்கறுப்புத் தலைமுடியை ஈரமாக்கிய வியர்வை, அவனது மெலிந்து நீண்ட கழுத்துக்கும் கீழாக வழிந்துகொண்டிருந்தது. நீண்ட துடுப்புகளின் கனத்தால், அவன் முன்பக்கமாகச் சிறிது குனிந்து வளைந்திருந்தான்; துடுப்புகளின் இருமுனைகளிலும் ஆரங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த பாசிகளிலிருந்து, அப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. …