home உன்னதம், கவிதை மாமா ஸோல்டன், காலப் பயணி

மாமா ஸோல்டன், காலப் பயணி

 

  • ஜோர்ஜ் ஸிர்டெஸ்

 

 

1

எனது குடும்பத்தினர் அனைவரும் காலத்தினூடே பயணிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர் எனக் கூறினார் மாமா ஸோல்டன். இரவில் அலாரம் கடிகாரத்தை அமைப்பது ஆபத்து நிறைந்ததாக இருந்தது.

 

2

அலாரம் கடிகாரங்கள் வருவதற்கு முன், தோட்டத்துச் சேவலுக்கு ஏற்பாடு செய்வோம். அது பல குரலொலிகளை எழுப்பும், ஆனால் பொதுவாகப் பிழைத்துக் கொள்கிறது என்றார் மாமா ஸோல்டன்.

 

3

1526 முதல் 1789 வரை செல்வதற்காக காலை முதல் அந்தி வரை நாங்கள் பயணிப்போம். கூடுதல் காலுறைகளைக் கொண்டு வருவோம் அல்லது அவற்றைப் பாதி வழியில் உருவாக்குவோம் என்றார் மாமா ஸோல்ட்டன்.

 

4

நான் ஆறு முறை மரமுனையில் தலை துண்டிக்கப்பட்டு எரிக்கப்பட்டேன் என்றார் மாமா ஸோல்டன். எப்பொழுதும் ஒரு கூடுதல் தலை மற்றும் ஒரு குப்பைப் பாத்திரத்தைச் சுமந்து கொண்டிருப்பேன் என்று என் தந்தை என்னிடம் கூறியுள்ளார்.

 

5

எனது பிறப்புச் சான்றிதழ்படி, நான் 1670-ல் பிறந்தேன், ஆனால் அந்தப் போட்டோ ஒரு மாறுதலான மீசையுடன் மிக இளைய வயதுள்ள யாரையோ காண்பிக்கிறது என்றார் மாமா ஸோல்டன்.

 

6

எனக்கு ஒருமுறை உல்ம் நாட்டுச் சீமானின் விதவை மனைவி நிக்ஸுடன் திருமணம் நடந்தது என்றார் மாமா ஸோல்டன். அவள் ஒரு உறுதியான ஓரசைச் சொல்லாளி.

 

7

அது அ முதல் ஆ வரையிலான ஒரு நாள் சவாரியாக இருந்தது என்றார் மாமா ஸோல்டன், ஆனால் டர்போடக் விடியோ கேம் விளையாட்டு மூலம் இ-யைப் பெறுவதில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். நாங்கள் முன்னணி டர்போடக் தயாரிப்பாளர்கள்.

 

8

ரயில்கள் எனக்குப் பிடித்தமானவை என்றார் மாமா ஸோல்டன். இனிப்பு மிளகுத்தூள் மற்றும் பாகற்காயுடன் அவற்றில் பயணிக்க விரும்புவேன். நான்  மூன்று – வாகனங்களில் பயணிக்கும் மனிதன், தனிப்பட்ட முறையில்.

 

9

நான் உண்மையில் எதிர்காலத்திலிருந்து பேசுகிறேன். இப்போது நான் சொல்வது மற்றொரு நூற்றாண்டில் உங்களுக்குக் கேட்காது. உங்கள் காதுகளைத் தோலுரித்து வையுங்கள் என்றார் மாமா ஸோல்டன்.

 

10

நாம் மரணத்திலிருந்து துவங்கி பின்னோக்கிச் செயல்பட்டால் வாழ்க்கை அதிகச் சிறப்பாகத் தோன்றும் என்றார் மாமா ஸோல்டன்.

 

 

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

ஜோர்ஜ் ஸிர்டெஸ்  புகழ் பெற்ற சர்வதேசக் கவிஞர் மற்றும்  ஹங்கேரிய மொழிபெயர்ப்பாளர். பல்வேறு விருதுகள் வென்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!